கனடாவில் பதிவு செய்யப்பட்ட சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையமானது தனது முதலாவது திட்டமாக தமது தலைமுறை தொடங்கிய ஊரான ஊறணி காங்கேசன்துறையில், இடப்பெயர்ந்து 28 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட யாழ்/ ஊறணி ஆரம்ப பாடசாலையில்  ஆரம்ப வகுப்பை ஆரம்பிக்கும் பிள்ளைகள் ,  பாடசாலைக்கு  வருவதை ஊக்குவிக்கும்  முகமாக சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையத்தால்  பாடசாலையின் மீள் திறப்பு விழாவில் ஒவொரு பிள்ளைக்கும் தலா ரூபா பத்தாயிரம் உதவித்தொகையாக வழங்கியது.

தற்போது இலங்கையிலும் பதிவுசெய்யப்பட்ட சாம்மரி தாயிசா அறக்கட்டளை மையமானது வலி வடக்கில் தனது முதலாவது திட்டமான “பசுமைத்திட்டம் 2018” எனும் திட்டத்தை முன் எடுத்துவருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் காணிகளை பயிர்செய்கைக்கு பயன்படுத்துவதன் மூலம் அந்த நிலங்களில் பசுமையை ஏற்படுத்துவதோடு உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதை  நோக்கமாக கொண்டுள்ளது. இந்தநிலங்களில் தனியாரோடு சாம்மரி தாயிசா அறக்கட்டளை மையமும் முதலீடு செய்கிறது. இந்தமுதலீட்டில் கிடைக்கும் வருமானத்தில் மேலும் பலரை வேலைக்கு அமர்த்தி பல காணிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்த உத்தேசித்துள்ளது.ஊருக்கும் சூழலுக்கும் பொருத்தமான இந்த திட்டத்தை தனது கன்னி முயற்சியாக Sam Mari Thaisa Farm, GREEN PROJECT 2018  என்னும் பெயர்பலகையை வெளியிட்டு, உத்தியோகபூர்வமாக இந்த திட்டத்தை ஆரம்பபித்திருக்கிறது

மேலும் இந்த திட்டத்தை ஊறணியில் மட்டுமல்லாது வலி வடக்கில் உள்ள மற்றைய ஊர்களிலும் செய்வதற்கு மிகுந்த ஆர்வத்துடன் சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையம் கார்திருக்கிறது என்பதையும் தெரிவித்துககொள்ள்கிறது. மேலும் இந்த திட்டத்திற்கென முதல் நபராக தனது காணியை தந்து உதவிய சாந்தினி மரியாம்பிள்ளைக்கும் தனது மனமார்ந்த நன்றியை சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையம் கூறிக்கொள்கிறது.

சாம் மரி தாய்சா ஒரு சமயம் சாரா தொண்டர் நிறுவனம். சாம் மரி தாய்சா ஆலயங்கள் கோவில்கள், மற்றும் சமய ரீதியான தொண்டுகளுக்கு உதவுவதைத்தவிர்த்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் முன்னிலைபடுத்தி அவர்களை முன்னேற்றும் நோக்கத்தோடு செயல்பட்டுவருகிறது. இந்த தொண்டாற்று சேவை தலைமுறை தலைமுறையாக தொடர நாம் எம்மை மேம்படுத்திக்கொள்வோம்

«நாமும் வாளர்வோம் பிறரையும் வாழவைப்போம்»!

 

சாம் மரி தாய்சா அறக்கட்டளை
ஊறணி காங்கேசன்துறை
இலங்கை
http://sammarithaisa.com/
https://www.facebook.com/sammari.thaisa

பயனுள்ள திட்ட ங்களை சாம் மரி தாய்சா எதிர்பார்க்கிறது. திட்டங்கள் எல்லாம் சரியான தரவுகளை உள்ளடக்கியதாக அவண வடிவத்தில் அமைந்த அணுகுமுறையாக சமர்ப்பிக்கப்படவேண்டும். எல்லா திட்ட்ங்களும் தொலை நோக்கோடு தனிமனிதனை மட்டுமன்றி சமுகத்தையும், சூழலையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் செயல்பாடாக அமையவேண்டும்.