கிளிநொச்சியில் வசிக்கும் டிநோஷன் எனும் இளையருக்கு சாம் மரி தாய்சா நிறுவனத்தின் வாழ்வாதர திட்டத்ததின் கீழ் 85 ,000.00 ரூபா பெறுமதியான மின் ஒட்டும் தொழில் தொடங்குவதற்கான இயந்திரங்களும் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

கிளிநொச்சியில் வசிக்கும் டிநோஷன் எனும் இளையருக்கு சாம் மரி தாய்சா நிறுவனத்தின் வாழ்வாதர திட்டத்ததின் கீழ் 85 ,000.00 ரூபா பெறுமதியான மின் ஒட்டும் தொழில் தொடங்குவதற்கான இயந்திரங்களும் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
திருகோணமலை rotary கழகத்தினூடாக நாட்டுக்கோழி வளர்ப்புக்காக smt யின் ஒரு குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி.அனுசரணை- camilas, Deny, Uthaya & selvi
திருகோணமலை கன்னியாவில் வசிக்கும் கணவனை இழந்த இரண்டு பிள்ளைகளை கொண்ட குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக smt ஆல் 15 கோழிகுஞ்சுகளும் 1 கோழிக்கூடும் சென்ற ஆண்டு 2020 ஒக்டொபேர் மாதம் வழங்கப்பட்டது. உதவியின் தற்போதைய நிலை , இதற்கான அனுசரணை அருட்செல்வி இரட்ணராஜா by fb fundraising
ஊறணி தையிட்டி பகுதியில் பயனாளிகளுக்கு Sam Mari Thaisa அமைப்பினரால் காணி துப்பரவாக்கி கொடுக்கப்பட்டது
Sam Mari Thaisa அமைப்பால் புதுவாழ்வு பூங்கா இல்லத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு தவசிக்குளம் பாடசாலையில் 18.02.2020 அன்று மதிய உணவு வழங்கியபோது
முன்னுரை கற்றாழை வறட்சியான பகதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உன்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. வறட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்கும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயாகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (அந்திரா), ராஜபிப்லா (குஜராத்), சேலம் …
வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிணறுகளை துப்பரவாக்கும் பணியில் எமது நிறுவனம் உதவி
சாம் மரி தாய்சா பசுமைத்திட்டம் 2018 இன் ஆரம்பகட்ட வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது . பிரதான பயிராக கத்தாழை பயிரிடப்பட்டிருக்கிறது . இதற்கு தெளிப்பான் பாசனம் (sprinkler irrigation) மூலம் நீர்பாசனம் செய்யப்பட்டுள்ளது. இதனோடு சேர்த்து வேறு பயன்தரும் பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்செய்கையின் பலனை அனுவவிக்க ஒரு சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
துப்பரவாக்கப்பட்ட கிணறு
Sam Mari Thaisa Farm 04.நவம்பர் 2018 இன்று Green Project 2018 என்ற திட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படது
நாளைய அங்குரார்ப்பண நிகழ்விற்கான ஆயத்தங்கள்
சாம் மரி தாய்சா பசுமை திட்டத்தின் முதல் கட்டமான காணி துப்புரவு செய்து பண்படுத்தும் வேலைகள் முடிவுக்கு வந்துள்ளன . துப்பரவின் போது இரண்டு கிரனைட் கள் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது
சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையமானது ஊர்விடுவிக்கபட்ட 2.வது நினைவுநாளான வருகின்ற 4.ஆம் திகதி நவம்பர் மாதம் 2018 ஞாயிறு அன்று “Sam Mari Thaisa farm” என்ற பசுமைத்திட்டத்தை எமது ஊரான ஊறணியில் ஆரம்பித்து வைக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறது . காலம்: 04 நவம்பர் 2018 நேரம் : காலை 10 மணி இடம் : ஊறணி, காங்கேசன்துறை ( சாந்தினி மரியாம்பிள்ளை வளவு )
சாம் மரி தாய்சா பசுமைத்திட்டம் 2018 ( Sam Mari Thaisa Green project 2018 K.K.S) சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையம் காங்கேசன்துறையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நிலங்களை அதன் உரிமையாளர்களின் அனுமதியுடன் பெற்று ,அதை பயனுள்ள நிலங்களாக மாற்றிக்கொடுப்பது . சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையம் இன்றைய சமூகச்சூழலுக்கு ஏற்றவகையில் அந்த நிலங்களை பசுமை நிறை நிலங்களாக மாற்றி அதில் பயன் தரும், நிழல் தரும் மரம்செடிகளை நீண்டகால அல்லது குறுகிய கால …
முதலாவது திட்டமாக யாழ்/ ஊறணி ஆரம்ப பாடசாலையில் ஆரம்ப வகுப்பை ஆரம்பிக்கும் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதை ஊக்குவிக்கும் முகமாக சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையத்தால் பாடசாலையின் மீள் திறப்பு விழாவில் ஒவொரு பிள்ளைக்கும் தலா ரூபா பத்தாயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டது .
பயனுள்ள திட்ட ங்களை சாம் மரி தாய்சா எதிர்பார்க்கிறது. திட்டங்கள் எல்லாம் சரியான தரவுகளை உள்ளடக்கியதாக ஆவண வடிவத்தில் அமைந்த அணுகுமுறையாக சமர்ப்பிக்கப்படவேண்டும். எல்லாத் திட்டங்களும் தொலை நோக்கோடு தனிமனிதனை மட்டுமன்றி சமூகத்தையும், சூழலையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் செயற்பாடாக அமையவேண்டும். சாம் மரி தாய்சா ஒரு சமயம் சாரா தொண்டர் நிறுவனம். சாம் மரி தாய்சா எந்தவிதமான ஆலயங்கள் ,கோவில்கள்,மற்றும் சமய ரீதியான தொண்டுகளுக்கு உதவுவதற்கு முன்வராது என்பதை தனது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த தொண்டாற்று …