சாம் மரி தாய்சா பசுமைத்திட்டம் 2018 ( Sam Mari Thaisa Green project 2018 K.K.S)
சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையம் காங்கேசன்துறையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நிலங்களை அதன் உரிமையாளர்களின் அனுமதியுடன் பெற்று ,அதை பயனுள்ள நிலங்களாக மாற்றிக்கொடுப்பது .

சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையம் இன்றைய சமூகச்சூழலுக்கு ஏற்றவகையில் அந்த நிலங்களை பசுமை நிறை நிலங்களாக மாற்றி அதில் பயன் தரும், நிழல் தரும் மரம்செடிகளை நீண்டகால அல்லது குறுகிய கால அடிப்படையில் நடுகை செய்து சூழலுக்கும் சமூகத்திற்கும் பயன்தரும் திட்டம் ஒன்றை செய்ய முன்வருகின்றது. இத்திடத்தின் ஊடாக வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவலாம் என சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையம் நம்புகின்றது.

இவற்றைவிடவும் தற்போது கிணறுகள் அரிதாக உள்ள நிலையில் ,அப்பிரதேசத்தின் வறட்சி நிலைமை பற்றியும் குடிநீர் வழங்கல் தேவையின் அவசியம் பற்றியும் பிரதேச சபையுடன்  கலந்துரையாடப்பட்டது . குறிப்பாக ஆவளை சந்தியில் உள்ள தண்ணீர் தாங்கி புனரமைப்பு செய்வதன் நன்மை பற்றியும் அங்கத்தவர்களால் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்

படிவத்தை கீழே உள்ள இணைப்பில் பார்வையிடவும்

Sam Mari Thaisa Green project 2018 K.K.S

You might also enjoy:

Leave A Comment

Your email address will not be published.